Oneplus Nord CE 3 Lite 5G Review in Tamil | NIGI ENGLISH CARE
byNIGI ENGLIHS CARE•
0
Oneplus Nord CE 3 Lite 5G தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Oneplus நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த புதிய Oneplus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட்போன் Nord பிராண்ட் தொலைபேசிகளில் ஒன்று. இது Oneplus Nord CE 2 Lite 5G இன் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
Nord CE 3 Lite 5G யில் சில குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களைப் செய்து இருக்கிறது. அதே நேரத்தில் சில அம்சங்கள் அப்படியே உள்ளன. ஆனால் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இனி Nord CE 3 Lite 5G யின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம். அதன் பிறகு இந்த போன்ஐ வாங்கலாமா அல்லது வேண்டாமா என முடிவு செய்து கொள்ளுங்கள்.
Oneplus Nord CE 3 Lite 5G விலை என்ன?
Oneplus Nord CE 3 Lite 5G மொபைல் இரண்டு வேறுபட்ட ஸ்டோரேஜ்களில் கிடைக்கிறது. முதலாவுதாக 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸ் மாடலின் விலை ரூ.19,999 ஆகும்.
இரண்டாவதாக 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.21,999 ஆகும்.
Oneplus Nord CE 3 Lite 5G எங்கு வாங்கலாம்?
இந்த போன் அமேசான், oneplus கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் வாங்கலாம்.
முதலில் Nord CE 3 Lite 5G Specifications பார்க்கலாம்
Display
6.72 Inch
Processor
Qualcomm Snapdragon 695
RAM
8GB
Storage
128GB and 256GB
Front Camera
16 MP
Rear Camera
108MP + 2MP + 2MP
Battery Capacity
5000mAh
OS
Android 13
Nord CE 3 Lite 5G டிசைன் அண்ட் டிஸ்பிளே விவரம்
டிசைன் அண்ட் டிஸ்பிளே வில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இது Chromatic Gray, Pastel Lime என இரண்டு கலர்களில் கிடைக்கிறது. பொதுவாக ஸ்மார்ட்போன்கள் கருப்பு, நீலம் அல்லது பச்சை நிறங்களில் தான் அதிகம் கிடைக்கும். இது வித்தியாசமாக Pastel Lime நிறத்தில் கிடைக்கிறது.
Nord CE 3 Lite 5G போனின் எடை 195கி ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வருகிறது. Nord CE 3 Lite 5G ஸ்மார்ட்போன் கையில் பிடிப்பதற்கு வசதியாகவும் நல்ல உணர்வையும் கொடுக்கிறது. Panel முன்பக்கம் flat ஆகவும் பின்பக்கம் cornor ல் சற்று curve ஆகவும் உள்ளது. எனவே வீடியோ அல்லது கேம்ஸ் விளையாடும் போது போன்ஐ கையாள்வது எளிதாக உள்ளது.
Nord CE 3 Lite 5G போன் IPS LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. ஆனால் AMOLED டிஸ்பிளே கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதை குறையாக சொல்ல முடியாது.
Oneplus Nord CE 3 Lite 5G சாப்ட்வேர்
இதில் Android 13 – Oxygen OS 13.1 என்ற சாப்ட்வேர் பயன்படுத்த படிக்கிறது. இந்த சாப்ட்வேர் எந்த தொய்வும் இல்லாமல் நன்றாக உள்ளது. இதற்கு OS அப்டேட் இரண்டு ஆண்டுகளும், செக்யூரிட்டி அப்டேட் 3 ஆண்டுகளும் கிடைக்கும். இந்த Nord CE 3 Lite 5G போனில் Qualcomm Snapdragon 695 SoC processor பயன்படுத்த படுகிறது.
Nord CE 3 Lite 5G பேட்டரி
இதில் 5000mAh பேட்டரி குடுக்கப்பட்டள்ளது. இந்த போன் 67W பாஸ்ட் சார்ஜிங் ஆவதற்கு சப்போர்ட் செய்கிறது. பேட்டரி 1-80 சதவீதம் சார்ஜ் ஆவதற்கு 30 நிமிடம் போதும் என OnePlus நிறுவனம் கூறுகிறது.
Nord CE 3 Lite 5G கேமரா
Nord CE 3 Lite 5G போனில் பின்புறம் 3 கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 108MP கூடிய மெயின் கேமரா உள்ளது. மேலும் 2MP மேக்ரோ கேமராவும், 2MP டெப்த் சென்சாரும் உள்ளது. முன்பக்கம் 16MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
Nord CE 3 Lite 5G ஸ்பீக்கர்
இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதி உள்ளது. போனின் கீழே 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் வசதி, USB type-C வசதி மற்றும் ஸ்பீக்கர் உள்ளது.
Nord CE 3 Lite 5G பிற விவரங்கள்
இதில் ப்ளூடூத் 5.1, wifi 5, 8GB virtual RAM மற்றும் 1TB அளவுக்கு ஸ்டோரேஜ் கெபாஸிட்டி விரிவு படுத்த முடியும்.
இதனுடைய refresh rate 120Hz ஆக உள்ளது. எனவே போன் பயன்படுத்தும் போது எந்த வித தொய்வும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.
Nord CE 3 Lite 5G போனின் இடதுபுறம் volume அட்ஜஸ்ட் செய்வதற்கு பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
வலது புறம் போன் onn, off செய்வதற்கு பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிங்கர் பிரிண்ட் மூலம் unlock செய்ய இந்த பட்டனலில் சென்சார் வசதி உள்ளது.
Oneplus Nord CE 3 Lite 5G போனின் சிறப்பு
டிசைன் அண்ட் குவாலிட்டி நன்றாக உள்ளது.
முன்பக்கம் உள்ள மெயின் கேமரா நன்றாக உள்ளது.
பேட்டரி நீடித்து உழைக்கிறது மற்றும் வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.
Oneplus Nord CE 3 Lite 5G போனின் குறைகள்
டிஸ்பிளே இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். AMOLED டிஸ்பிளே கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.